ஒரு காருக்குள்ளே பத்து பேரு (சிறுகதை)

மலை உச்சியில் இருந்து ஆற்றில் குதிப்பது, நிறைய நேரம் தம் கட்டி தண்ணிகுள் இருப்பது, விஷம் குடித்து முடிந்த வரை தாக்குபிடிப்பது, எண்ணற்ற  தூக்க மாத்திரைகளை உண்டு தூங்காமல் இருப்பது என பல சோதனையில் இறங்கி பார்த்தாகிவிட்டது. ஆனால் அவனுடைய வேட்க்கை தணியவில்லை.

அவன் தங்கி இருக்கும் அறையில் ஒரு நாள் அவன் காணவில்லை. ஏதோ ஒரு திரைப்படத்தில் சவ பெட்டிக்குள்ளிருந்து சவபெட்டியை உடைத்து மண்ணிலிருந்து வெளிவந்ததை கண்டு அவனுக்கு பிடித்து போனது. அதனையே அவனும் செய்ய துணிந்தான். ஆனால் சவபெட்டியை தன் கையாலேயே உடைத்து காட்டும் அந்த ஹீரோ பெட்டி உடைந்த உடன் மேலே உள்ள மண் சவபெட்டிகுள் வந்து விடும். அதிலிருந்து எப்படி வெளி வருவது என காட்டப்படவில்லை.

ஆனால் ராய்ஸ்டன், மணல் தன் மேல் மூடப்பட்டதையும் மூச்சை கட்டி கொண்டு மேலெழுந்து வந்தான்.

அவனுக்கு மனநோய் எதுவுமில்லை. அது அவனது ஏக்கம். தீராத வேட்கை.

அந்த கார் விற்கபடாமாலையே இருந்தது. சிலர் காரை வாங்கி கொண்டனர். ஆனால் வாங்கியவனிடமே மீண்டும் கொடுத்து சென்றனர்.



ஏனென்றால் அந்த காரில் பேய்கள் இருப்பதாக கார் ஓட்டியவர்கள் உணர்ந்தனர்.

சிலர் கார் கண்டிசன் சரி இல்லை என்றனர். சிலர் பேய் இருக்கு என்றனர். சிலர் ஒன்னு இல்ல நிறைய இருக்கு என்றனர். ஆனால் கார் தற்போது வைத்திருக்கும் சதாசிவனுக்கு தெரியும் காரில் மொத்தம் தன் மகனோடு சேர்த்து பத்து பேய்கள் இருக்கிறது என்று.

தன் மகனும் அவரிடம் சொல்லி கொண்டுதான் இருந்தான். மொத்தம் எட்டு பேய்கள் இருப்பதாக உணர்கிறேன் என்று.

பேயே இல்லன்றேன் அதுல கரக்ட்டா ஒன்பது பேயாம் என்று சதாசிவம் அதை தட்டி கழித்தார். பிறகு தன் மகன் அவன் நண்பனோடு விபத்தில் இறந்த பிறகு ஒரு நாள் அந்த காரை ஓட்டி பார்த்த பிறகே காரில் பேய் இருப்பதை உணர்ந்தார்.

கார் அவர் கட்டுபாட்டில் இல்லை. அதுவாகவே திரும்புகிறது, கியர் மாற்றபடுகிறது. நின்று கொள்கிறது. பெட்ரோல் தீருவதாக இருந்தால் பெட்ரோல் பங்கை நோக்கி செல்கின்றது. ட்ராபிக்கில் விடாமல் ஹாரன் அடிக்கிறது. யாருனும் முறைத்தால் அவனை மாட்டி விட்டுவிட்டு காணமல் போய் விடுகிறது.

எந்நேரமும் காரில் பேச்சு சத்தம். அதில் ஒரு தம்பதியின் சண்டை ஓயாமல் ஒளித்து கொண்டிருக்கும். அதிலே இன்னொரு தம்பதியின் ரொமான்ஸ் தாங்காது. முத்தம் சத்தம், இச்சை சத்தம் கார் நாம் ஓட்டினால் கூட கட்டுபாட்டை இழந்து விடும். அந்த ரொமான்ஸ் தம்பதியில் புருசனுக்கு சின்ன வீடு ஒன்னு இருக்கு. அதுலயும் அந்த காருக்குல்லையே இருக்கு. அது எப்போதுமே தனிய புலம்பி கொண்டிருக்கும். நான் மட்டும் அன்னைக்கு இந்த காருல ஏறலன்ன இந்நேரம் வேற எவனையாவது கரக்ட் பண்ணிட்டு போய் இருப்பேன். இப்போ ஆவியா ஆகி இப்படி புலம்ப விட்டுட்டானே இந்த பாவி என்று புலம்பி தள்ளி விடுவாள்.

இந்த பிரேக் அமுக்குவது, ஸ்டேரிங் திருப்புவது, ட்ராபிக்கில் விடாமல் ஹாரன் அடிப்பது போன்ற வேலைகளை சண்டை போடும் தம்பதிகளின் மூன்று வாண்டுகள் இருக்கிறார்கள் அவர்கள் அதை பார்த்து கொள்வார்கள்.

சண்டை போடும் தம்பதி, ரொமான்ஸ் தம்பதி, சின்ன வீடு மற்றும் அந்த மூன்று வாண்டுகள் போக நட்பின் இலக்கணமாக திகழும் இரண்டு நண்பர்களும் அந்த பத்தில் அடக்கம். அந்த நண்பர்களில் ஒருவன் தான் சதாசிவதினுடைய மகன்.

இந்த காரை எப்படியாவது விற்று விட வேண்டுமென்று பல முயற்சிகள் எடுத்திருந்தார் சதா சிவம். இறுதியாக தன் நெருங்கிய நண்பனிடம் இதை பற்றி சொல்ல அவன் ஒரு யோசனை கொடுத்தான். பேய் இருக்குறத மறச்சி வித்தா இன்னக்கி இல்லனாலும் என்னைக்காவது உனக்கு பிரச்னை வரும். பேய் இருக்குன்னே சொல்லி வித்துடு என்பது தான் அவர் நண்பரின் ஆலோசனை.

அதன் படி தின இதழ் ஒன்றில் இவ்வாறு விளம்பரம் செய்தார்.

ஒன்றல்ல பத்து பேய்கள் உலாவும் கார்.

இதுவரை பங்களாவை தான் அவ்வாறு கேள்விபட்டிருப்பீர்கள். ஆனால் இது கார். என்று பல வார்த்தை ஜாலங்களோடு அந்த விளம்பரம் இருந்தது.

அந்த விளம்பரம் படித்து நியூஸ் பேப்பரை கிழே வைத்தான் ராய்ஸ்டன்.

இந்த காரை வாங்கவேண்டுமென அவனது மனதுக்குள் முடிவானது.

காரோட விலை இது தாங்க. ஆனா கார் வங்கிக்கனும்ன்னா இந்த ஒப்பந்தத்துல ஒரு சைன் மட்டும் போட்டிடுங்க என்றார் சதாசிவம்.

எல்லா விசயமும் தெரிஞ்சி தான் இந்த கார் வாங்குறேன். ஒரு ப்ளாங் பேப்பர் கொடுங்க அதுல கூட சைன் பண்ணி தரேன் என்றான் ராய்ஸ்டன்.




காரை வாங்கினான்.

காரை ஏதோ ஒரு பாலத்தின் கீழ் நிறுத்தி இருந்தான் ராய்ஸ்டன்.

ஒரு மணி நேரம் வரை காரில் எவ்வித சலனுமும் இல்லை.

காரை ஸ்டார்ட் செய்தான்.

டக்கென ஆப் ஆனது.

இப்போ தான் உங்க வேலை காட்டனும்ன்னு தோனிச்சா? ஏன் என்னை எல்லாம் பார்த்தா உங்களுக்கு மனுஷனா தெரியல? நான் பயபடமட்டேன்னு நினச்சிடீன்களா? என்று சொல்லி முடிக்க தான் தாமதம். கார் ஸ்டார்ட் ஆகி சர் என்று சிறுது தூரம் நகர்ந்து மீண்டும் ஆப் ஆகி நின்றது.

ராய்ஸ்டன் அதை எதிர்பார்க்கவில்லை. அதை வெளிகாட்டி கொள்ளாமல். சோ, இவ்வளவு தான் நீங்க இல்ல??!!! சாரி சாரி...!!!! உங்க கிட்ட ரொம்ப எதிர் பார்த்துட்டேன் என்று அவர்கள் மேல் வருத்தபட்டான்.

கார் ஸ்டார்ட் ஆனது பாலத்தின் கீழ் இருந்து சாலைக்கு வந்தது. வேகமாக சீறி பாய்ந்தது. காரில் சவுண்ட் சிஸ்டம் ஆன் ஆனது.

ராய்ஸ்டன் அந்த வேகத்தை அனுபவித்து கொண்டிருந்தான்.

கார் வேகத்தின் கட்டுபாட்டை கடந்தது. நடுவில் எங்கோ செக் போஸ்ட் வர அதை இடுத்து தள்ளி பறந்தது. 

அந்த காரை போலிஸ் கார்கள் துரத்த தொடங்கினர்.

கார் நிற்காமல் விர்ரென்று பறந்தது.

போலிஸ் அடுத்ததடுத்த செக் போஸ்டில் அறிவித்தனர். அந்த செக் போஸ்ட்டையும் கடந்து சென்றது அந்த பேய் கார்.

ராய்ஸ்டன் எதையுமே கண்டுகொள்ளவில்லை. அந்த வேகத்தை அனுபவித்தான்.

அதெல்லாம் சரி அந்த  பாட்ட அமத்தி தொல சனியனே.

சவுண்ட் சிஸ்டம் திடிரென ஆப் ஆனது.

என்ன எதுக்கு திட்றீங்க. சும்மா சும்மா என்னையவே கேக்காதிங்க உங்க மூணு பசங்க செய்யுற சேட்டைய பாருங்க. அடங்குரான்களா இவனுங்க. அவனுக தான் இந்த டேப் ஆன் பண்ணது.

டேய் மெதுவா போங்கடா ஏன் பறக்குறீங்க.

சும்மா இருங்க டாடி கார் ஒட்டி கிட்டு இருக்கோம்ல. அப்புறம் அந்த ஆண்டி கிட்ட சொல்லிடுவேன்.

எந்த ஆண்டி கிட்ட டா?

அதான் ஓரமா உக்காந்து புலம்பிகிட்டே இருக்குமே.

அந்த சின்ன வீட்டை அவன் பார்த்து வழிந்தான்.

அங்க என்ன பார்வை?! கண்ண நோண்டி  புடுவேன் நோண்டி. அடியே இங்க என்ன பார்வை?

ஏ என்னா! எப்போ பாத்தாலும் ஓவரா போற? அடிங்ங்ங்ககக!!! என்ன பார்த்தா எப்படி தெரியுது?!

அந்த இச்சை சத்தமும் உடன் ஆரம்பித்தது. ஹலோ அங்கிட்டு ஓரமா போய் சண்ட போடுங்க. ரொமான்ஸ் மூட கெடுக்காதிங்க.

கருமம் கருமம் இருபத்தி நாலு மணி நேரமும் எப்படி தான் கொஞ்சி கொளவுரானுகளோ. ஏ நீ அவனோட சின்ன வீடு தான?! அவன் உன்ன கண்டுக்கததால என் புருஷன் மேல பார்வை போடுறயா?

அம்மா சும்மா கத்தி கிட்டே கிடக்காத இப்போ தான் சூப்பர் சீன் வர போகுது என்றனர் அந்த வாண்டுகள்.

என்ன நடக்கபோகிறது என்பதை ராய்ஸ்டனால் யூகிக்க முடியவில்லை.

வழக்கம் போல பிரச்சனை உச்சகட்டம் எட்டியவுடன் ராய்ஸ்டனை மாட்டி விட சடாரென வேகத்தை குறைத்து பிரேக் அமுக்கினர் அந்த வாண்டுகள்.

ராய்ஸ்டன் பதறி போனான். டேய் பிசாசுங்களா என்ன பண்ணி தொலைக்குறீங்க?!

டேய் முண்டம் எங்கள அப்படி கேள்வி கேட்ட! நாங்க யாருன்னு காமிச்சோட்டோம். நீ யாருன்னு காமி என்றனர்.



ராய்ஸ்டன் காரை இயக்க தொடங்கினான். போலிஸ் கார்கள் அவனை நெருங்கி விட்டன. இருபுறமும் வந்த கார்களை இடுத்து கொண்டு முன்னேறி சென்றான்.

போலிஸ் கார்கள் சேதமாகவே கார்கள் நின்றன.

ஏதோ ஒரு காட்டுக்குள் புகுந்தது அந்த கார்.

மீண்டும் காரை அந்த வாண்டுகள் இயக்க தொடங்கினர்.

மலை பாதை வந்தது.

அதிலும் வேகமெடுத்து சென்றது கார்.

மீண்டும் பழைய நிலையிலே ராய்ஸ்டன் ரசிக்க தொடங்கினான்.

ஆனால் அந்த வேகம் அலுத்து போனது. டேய் லூசுங்கள இது போர் அடிக்குது வேற ஏதாவது பண்ணுங்க.

வாண்டுகள் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டனர்.

டேய் லூசு முண்டம் ஸ்பீட் இவ்வளவு தான் இருக்கு. இதுக்கு மேலே ஸ்பீடா போக முடியாது. இதுக்கு மேலே ஸ்பீடா போக முடிந்தாலும் போக மாட்டோம். ஏன்னா ஏற்கனவே ஆக்சிடண்ட் ஆகி தான் நாங்க எல்லாரும் செத்துட்டோம். திரும்ப அப்படி ஆகிடோமொன்னு எங்களுக்கெல்லாம் பயம் என்றவுடன் அப்போ அதுல தானே இன்ட்ரஸ்ட்ன்னு சொல்லி ஸ்டேரிங்கை இடது புறம் திருப்பினான்.

தடுப்பை பெயர்த்து கொண்டு கார் ஜிவ்வென்று பறந்தது.

அதில் உள்ள பேய்கள் பயந்து பீதியில் காரை விட்டு ஒவ்வொன்றாக வெளியே குதித்தது.

கடைசியாக அந்த வாண்டுகள் நாங்க தான் சொன்னோம்ல ஏண்டா இப்படி பண்ண?! என்று சொல்லி விட்டு அதுகளும் குதிக்கவே கார் தாறுமாறாக எங்கோ காட்டுக்குள் ஒரு மரத்தின் மேலே மோதி நின்றது.

கடைசியாக கட்டி பின்னி இருந்த அந்த இரண்டு இணை பிரியாத நண்பர்களும் வெளியேறினர்.

காரில் ஒரு சலனுமும் இல்லாமல் அமைதியாக இருந்தது.


-திவான்

5 comments:

  1. வித்தியாசமான கோணத்தில் எழுதப்பட்ட சிறுகதை நண்பா.. அருமை.. தங்கள் முதல் தெரியவில்லை தொடர்ந்து எழுதுங்கள்..

    Please remove word verification in your settings..

    ReplyDelete
  2. நன்றி! நிச்சயமாக!

    ReplyDelete
  3. ungal elluthu nadai nalla irukku. aaana unga writing la etho onnu missu aagudu

    ReplyDelete
  4. Thanks :) Yennannu sollunga thirithi kolgiren

    ReplyDelete
  5. வித்தியாசமான கதை.

    ReplyDelete