ஒரு காருக்குள்ளே பத்து பேரு (சிறுகதை)

மலை உச்சியில் இருந்து ஆற்றில் குதிப்பது, நிறைய நேரம் தம் கட்டி தண்ணிகுள் இருப்பது, விஷம் குடித்து முடிந்த வரை தாக்குபிடிப்பது, எண்ணற்ற  தூக்க மாத்திரைகளை உண்டு தூங்காமல் இருப்பது என பல சோதனையில் இறங்கி பார்த்தாகிவிட்டது. ஆனால் அவனுடைய வேட்க்கை தணியவில்லை.

அவன் தங்கி இருக்கும் அறையில் ஒரு நாள் அவன் காணவில்லை. ஏதோ ஒரு திரைப்படத்தில் சவ பெட்டிக்குள்ளிருந்து சவபெட்டியை உடைத்து மண்ணிலிருந்து வெளிவந்ததை கண்டு அவனுக்கு பிடித்து போனது. அதனையே அவனும் செய்ய துணிந்தான். ஆனால் சவபெட்டியை தன் கையாலேயே உடைத்து காட்டும் அந்த ஹீரோ பெட்டி உடைந்த உடன் மேலே உள்ள மண் சவபெட்டிகுள் வந்து விடும். அதிலிருந்து எப்படி வெளி வருவது என காட்டப்படவில்லை.

ஆனால் ராய்ஸ்டன், மணல் தன் மேல் மூடப்பட்டதையும் மூச்சை கட்டி கொண்டு மேலெழுந்து வந்தான்.

அவனுக்கு மனநோய் எதுவுமில்லை. அது அவனது ஏக்கம். தீராத வேட்கை.

அந்த கார் விற்கபடாமாலையே இருந்தது. சிலர் காரை வாங்கி கொண்டனர். ஆனால் வாங்கியவனிடமே மீண்டும் கொடுத்து சென்றனர்.



ஏனென்றால் அந்த காரில் பேய்கள் இருப்பதாக கார் ஓட்டியவர்கள் உணர்ந்தனர்.

சிலர் கார் கண்டிசன் சரி இல்லை என்றனர். சிலர் பேய் இருக்கு என்றனர். சிலர் ஒன்னு இல்ல நிறைய இருக்கு என்றனர். ஆனால் கார் தற்போது வைத்திருக்கும் சதாசிவனுக்கு தெரியும் காரில் மொத்தம் தன் மகனோடு சேர்த்து பத்து பேய்கள் இருக்கிறது என்று.

தன் மகனும் அவரிடம் சொல்லி கொண்டுதான் இருந்தான். மொத்தம் எட்டு பேய்கள் இருப்பதாக உணர்கிறேன் என்று.

பேயே இல்லன்றேன் அதுல கரக்ட்டா ஒன்பது பேயாம் என்று சதாசிவம் அதை தட்டி கழித்தார். பிறகு தன் மகன் அவன் நண்பனோடு விபத்தில் இறந்த பிறகு ஒரு நாள் அந்த காரை ஓட்டி பார்த்த பிறகே காரில் பேய் இருப்பதை உணர்ந்தார்.

கார் அவர் கட்டுபாட்டில் இல்லை. அதுவாகவே திரும்புகிறது, கியர் மாற்றபடுகிறது. நின்று கொள்கிறது. பெட்ரோல் தீருவதாக இருந்தால் பெட்ரோல் பங்கை நோக்கி செல்கின்றது. ட்ராபிக்கில் விடாமல் ஹாரன் அடிக்கிறது. யாருனும் முறைத்தால் அவனை மாட்டி விட்டுவிட்டு காணமல் போய் விடுகிறது.

எந்நேரமும் காரில் பேச்சு சத்தம். அதில் ஒரு தம்பதியின் சண்டை ஓயாமல் ஒளித்து கொண்டிருக்கும். அதிலே இன்னொரு தம்பதியின் ரொமான்ஸ் தாங்காது. முத்தம் சத்தம், இச்சை சத்தம் கார் நாம் ஓட்டினால் கூட கட்டுபாட்டை இழந்து விடும். அந்த ரொமான்ஸ் தம்பதியில் புருசனுக்கு சின்ன வீடு ஒன்னு இருக்கு. அதுலயும் அந்த காருக்குல்லையே இருக்கு. அது எப்போதுமே தனிய புலம்பி கொண்டிருக்கும். நான் மட்டும் அன்னைக்கு இந்த காருல ஏறலன்ன இந்நேரம் வேற எவனையாவது கரக்ட் பண்ணிட்டு போய் இருப்பேன். இப்போ ஆவியா ஆகி இப்படி புலம்ப விட்டுட்டானே இந்த பாவி என்று புலம்பி தள்ளி விடுவாள்.

இந்த பிரேக் அமுக்குவது, ஸ்டேரிங் திருப்புவது, ட்ராபிக்கில் விடாமல் ஹாரன் அடிப்பது போன்ற வேலைகளை சண்டை போடும் தம்பதிகளின் மூன்று வாண்டுகள் இருக்கிறார்கள் அவர்கள் அதை பார்த்து கொள்வார்கள்.

சண்டை போடும் தம்பதி, ரொமான்ஸ் தம்பதி, சின்ன வீடு மற்றும் அந்த மூன்று வாண்டுகள் போக நட்பின் இலக்கணமாக திகழும் இரண்டு நண்பர்களும் அந்த பத்தில் அடக்கம். அந்த நண்பர்களில் ஒருவன் தான் சதாசிவதினுடைய மகன்.

இந்த காரை எப்படியாவது விற்று விட வேண்டுமென்று பல முயற்சிகள் எடுத்திருந்தார் சதா சிவம். இறுதியாக தன் நெருங்கிய நண்பனிடம் இதை பற்றி சொல்ல அவன் ஒரு யோசனை கொடுத்தான். பேய் இருக்குறத மறச்சி வித்தா இன்னக்கி இல்லனாலும் என்னைக்காவது உனக்கு பிரச்னை வரும். பேய் இருக்குன்னே சொல்லி வித்துடு என்பது தான் அவர் நண்பரின் ஆலோசனை.

அதன் படி தின இதழ் ஒன்றில் இவ்வாறு விளம்பரம் செய்தார்.

ஒன்றல்ல பத்து பேய்கள் உலாவும் கார்.

இதுவரை பங்களாவை தான் அவ்வாறு கேள்விபட்டிருப்பீர்கள். ஆனால் இது கார். என்று பல வார்த்தை ஜாலங்களோடு அந்த விளம்பரம் இருந்தது.

அந்த விளம்பரம் படித்து நியூஸ் பேப்பரை கிழே வைத்தான் ராய்ஸ்டன்.

இந்த காரை வாங்கவேண்டுமென அவனது மனதுக்குள் முடிவானது.

காரோட விலை இது தாங்க. ஆனா கார் வங்கிக்கனும்ன்னா இந்த ஒப்பந்தத்துல ஒரு சைன் மட்டும் போட்டிடுங்க என்றார் சதாசிவம்.

எல்லா விசயமும் தெரிஞ்சி தான் இந்த கார் வாங்குறேன். ஒரு ப்ளாங் பேப்பர் கொடுங்க அதுல கூட சைன் பண்ணி தரேன் என்றான் ராய்ஸ்டன்.




காரை வாங்கினான்.

காரை ஏதோ ஒரு பாலத்தின் கீழ் நிறுத்தி இருந்தான் ராய்ஸ்டன்.

ஒரு மணி நேரம் வரை காரில் எவ்வித சலனுமும் இல்லை.

காரை ஸ்டார்ட் செய்தான்.

டக்கென ஆப் ஆனது.

இப்போ தான் உங்க வேலை காட்டனும்ன்னு தோனிச்சா? ஏன் என்னை எல்லாம் பார்த்தா உங்களுக்கு மனுஷனா தெரியல? நான் பயபடமட்டேன்னு நினச்சிடீன்களா? என்று சொல்லி முடிக்க தான் தாமதம். கார் ஸ்டார்ட் ஆகி சர் என்று சிறுது தூரம் நகர்ந்து மீண்டும் ஆப் ஆகி நின்றது.

ராய்ஸ்டன் அதை எதிர்பார்க்கவில்லை. அதை வெளிகாட்டி கொள்ளாமல். சோ, இவ்வளவு தான் நீங்க இல்ல??!!! சாரி சாரி...!!!! உங்க கிட்ட ரொம்ப எதிர் பார்த்துட்டேன் என்று அவர்கள் மேல் வருத்தபட்டான்.

கார் ஸ்டார்ட் ஆனது பாலத்தின் கீழ் இருந்து சாலைக்கு வந்தது. வேகமாக சீறி பாய்ந்தது. காரில் சவுண்ட் சிஸ்டம் ஆன் ஆனது.

ராய்ஸ்டன் அந்த வேகத்தை அனுபவித்து கொண்டிருந்தான்.

கார் வேகத்தின் கட்டுபாட்டை கடந்தது. நடுவில் எங்கோ செக் போஸ்ட் வர அதை இடுத்து தள்ளி பறந்தது. 

அந்த காரை போலிஸ் கார்கள் துரத்த தொடங்கினர்.

கார் நிற்காமல் விர்ரென்று பறந்தது.

போலிஸ் அடுத்ததடுத்த செக் போஸ்டில் அறிவித்தனர். அந்த செக் போஸ்ட்டையும் கடந்து சென்றது அந்த பேய் கார்.

ராய்ஸ்டன் எதையுமே கண்டுகொள்ளவில்லை. அந்த வேகத்தை அனுபவித்தான்.

அதெல்லாம் சரி அந்த  பாட்ட அமத்தி தொல சனியனே.

சவுண்ட் சிஸ்டம் திடிரென ஆப் ஆனது.

என்ன எதுக்கு திட்றீங்க. சும்மா சும்மா என்னையவே கேக்காதிங்க உங்க மூணு பசங்க செய்யுற சேட்டைய பாருங்க. அடங்குரான்களா இவனுங்க. அவனுக தான் இந்த டேப் ஆன் பண்ணது.

டேய் மெதுவா போங்கடா ஏன் பறக்குறீங்க.

சும்மா இருங்க டாடி கார் ஒட்டி கிட்டு இருக்கோம்ல. அப்புறம் அந்த ஆண்டி கிட்ட சொல்லிடுவேன்.

எந்த ஆண்டி கிட்ட டா?

அதான் ஓரமா உக்காந்து புலம்பிகிட்டே இருக்குமே.

அந்த சின்ன வீட்டை அவன் பார்த்து வழிந்தான்.

அங்க என்ன பார்வை?! கண்ண நோண்டி  புடுவேன் நோண்டி. அடியே இங்க என்ன பார்வை?

ஏ என்னா! எப்போ பாத்தாலும் ஓவரா போற? அடிங்ங்ங்ககக!!! என்ன பார்த்தா எப்படி தெரியுது?!

அந்த இச்சை சத்தமும் உடன் ஆரம்பித்தது. ஹலோ அங்கிட்டு ஓரமா போய் சண்ட போடுங்க. ரொமான்ஸ் மூட கெடுக்காதிங்க.

கருமம் கருமம் இருபத்தி நாலு மணி நேரமும் எப்படி தான் கொஞ்சி கொளவுரானுகளோ. ஏ நீ அவனோட சின்ன வீடு தான?! அவன் உன்ன கண்டுக்கததால என் புருஷன் மேல பார்வை போடுறயா?

அம்மா சும்மா கத்தி கிட்டே கிடக்காத இப்போ தான் சூப்பர் சீன் வர போகுது என்றனர் அந்த வாண்டுகள்.

என்ன நடக்கபோகிறது என்பதை ராய்ஸ்டனால் யூகிக்க முடியவில்லை.

வழக்கம் போல பிரச்சனை உச்சகட்டம் எட்டியவுடன் ராய்ஸ்டனை மாட்டி விட சடாரென வேகத்தை குறைத்து பிரேக் அமுக்கினர் அந்த வாண்டுகள்.

ராய்ஸ்டன் பதறி போனான். டேய் பிசாசுங்களா என்ன பண்ணி தொலைக்குறீங்க?!

டேய் முண்டம் எங்கள அப்படி கேள்வி கேட்ட! நாங்க யாருன்னு காமிச்சோட்டோம். நீ யாருன்னு காமி என்றனர்.



ராய்ஸ்டன் காரை இயக்க தொடங்கினான். போலிஸ் கார்கள் அவனை நெருங்கி விட்டன. இருபுறமும் வந்த கார்களை இடுத்து கொண்டு முன்னேறி சென்றான்.

போலிஸ் கார்கள் சேதமாகவே கார்கள் நின்றன.

ஏதோ ஒரு காட்டுக்குள் புகுந்தது அந்த கார்.

மீண்டும் காரை அந்த வாண்டுகள் இயக்க தொடங்கினர்.

மலை பாதை வந்தது.

அதிலும் வேகமெடுத்து சென்றது கார்.

மீண்டும் பழைய நிலையிலே ராய்ஸ்டன் ரசிக்க தொடங்கினான்.

ஆனால் அந்த வேகம் அலுத்து போனது. டேய் லூசுங்கள இது போர் அடிக்குது வேற ஏதாவது பண்ணுங்க.

வாண்டுகள் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டனர்.

டேய் லூசு முண்டம் ஸ்பீட் இவ்வளவு தான் இருக்கு. இதுக்கு மேலே ஸ்பீடா போக முடியாது. இதுக்கு மேலே ஸ்பீடா போக முடிந்தாலும் போக மாட்டோம். ஏன்னா ஏற்கனவே ஆக்சிடண்ட் ஆகி தான் நாங்க எல்லாரும் செத்துட்டோம். திரும்ப அப்படி ஆகிடோமொன்னு எங்களுக்கெல்லாம் பயம் என்றவுடன் அப்போ அதுல தானே இன்ட்ரஸ்ட்ன்னு சொல்லி ஸ்டேரிங்கை இடது புறம் திருப்பினான்.

தடுப்பை பெயர்த்து கொண்டு கார் ஜிவ்வென்று பறந்தது.

அதில் உள்ள பேய்கள் பயந்து பீதியில் காரை விட்டு ஒவ்வொன்றாக வெளியே குதித்தது.

கடைசியாக அந்த வாண்டுகள் நாங்க தான் சொன்னோம்ல ஏண்டா இப்படி பண்ண?! என்று சொல்லி விட்டு அதுகளும் குதிக்கவே கார் தாறுமாறாக எங்கோ காட்டுக்குள் ஒரு மரத்தின் மேலே மோதி நின்றது.

கடைசியாக கட்டி பின்னி இருந்த அந்த இரண்டு இணை பிரியாத நண்பர்களும் வெளியேறினர்.

காரில் ஒரு சலனுமும் இல்லாமல் அமைதியாக இருந்தது.


-திவான்

பச்சோந்தி (சிறுகதை)


சிக்னலையும் மதிக்காமல் ரோட்டை கடந்து இரு வாகனங்களையும் லேசாக முட்டி தள்ளி விட்டு ரோட்டோரமாய் இருந்த பிளாட்பாரத்தில் மாருதி 800 முட்டி நின்றது. அங்கிருந்த நடைபாதை கடைகள் நாசமாகின.

அங்கிருந்த ட்ராபிக் இன்ஸ்பெக்டர் நீதிதேவன் மற்றும் முத்துராம், வாகனம்பிள்ளை என்ற இரு ட்ராபிக் கான்ஸ்டபில்கள் வேகமாக கார் இருக்கும் இடத்திற்கு வந்தனர்.

யோவ் என்னையா இது புதுவண்டியாட்டம்ல தெரியுது நம்பர் பாருவே என்றார் நீதி.


சார் ரிஜிஸ்ட்ரேசன் கூட பன்னல சார் இது கான்ஸ்டபில் முத்துராம்.

நீதி: யோவ் யாருலே. கார விட்டு எறங்கு.

காரில் இருந்த டிரைவர் மெதுவாக கீழ் இறங்கினான்.

நீதி: சிக்னல கூட மதிக்காம இவ்வளவு வேமா எங்கள்ள போற? ஓ பேருன்ன?

சத்யன்யா என்றான்.

அங்கிருந்த நடைபாதை வியாபாரிகள் அதிகாரியிடம் புலம்ப ஆரம்பித்தனர்.

வியாபாரி முத்தம்மாள்: அய்யா இங்க பாருங்கோ. எம்புட்டு காய்கறிக நாசாமா போவிடுத்து. விடாதிங்க அய்யா அடிங்க. இப்படியா வண்டி ஒட்டி வரவா? விடாதிங்கயா.

நீதி: இருமா பேசுறேன்ல. பைன் போடுல. ஜீப்ப கொண்டா. ஏத்துல வண்டியல...

சத்யன்: சார் சார் தெரியாம பண்ணிட்டேன். சாரி சார்.

வாகனம்: சார் செத்த இங்குட்டு வாங்க.

நீதி: என்னயா?

வாகனம்: இதே காரு தான் சார். இதே காரு தான். நேத்து கமிசனர் ஐயா வீட்டுல பாத்தே. நீங்க பாட்டுக்கே பைன் எதுவும் போட்டு விட்டுடாதிங்கே. இந்த பையன பாத்தாக்க அங்கிருந்த டிரைவர் மாதிரியே இருக்காப்புல..

நீதி: என்னாயா சொல்ற?!

வாகனம்: அட ஆமாயா!

நீதிதேவன் தொப்பியை கழட்டி காரின் மீது வைத்தான்... தொப்பியில் இருந்த சிங்கமோ சப்பென்று மங்கலாக தெரிந்தது.

நீதி: எவ்வளவு வெயிலு கொஞ்சநெஞ்சமாவா வெயிலடிக்குது. சூ... ப்பா...

ஏலே கெழவி பிளாட்பாரத்துல கடைய விரிக்காதன்னு எத்தன தடவ சொல்லிர்க்கே. ஒரு மொரயாவது கேட்ருக்கியாலே இதுல இவங்கள வேற அடிக்க சொல்லுதுவே. யோவ் முத்துராமு கொண்டாயா பேப்பர... எழுதுயா இந்தம்மா பேர... எழுதி பைன் போடு. யாருயா நீ ஓ பேரு என்ன எல்லார் பேரையும் எழுது... ஒருத்தனையும் விடாதே.

இவ்வாறு கூறியவுடன் அங்கிருந்த வியாபாரிகள் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து கொண்டனர். கிரகபுடிச்ச பயவுள்ள தினைக்கும் வந்து காசுவாங்கிட்டு நம்ம மேலே பைன் போடுதாமுள்ள பைனு என்று மனதில் நினைத்து கொண்டாள் வியாபாரி முத்தம்மாள்.

முத்துராம்: சார் என்ன சார் இடிச்சவன விட்டுபுட்டு இடிவாங்குனவங்கள புடிக்குரிங்க...

வாகனம்: யோவ் விவரம் தெரியாம பேசாதய்யா இது கமிசனர் காரு.

முத்துராம்: என்னது கமிசனர் காரா? இதுவா? அட போங்க சார். கமிசனர் ஆவது இந்த சின்ன கார வாங்குரதாவது.

நீதி: அதானே இம்புட்டு சின்ன காரா வாங்க போறாரு. அவர் கிட்ட இருக்குறது எல்லாமே இனோவா, பொலிரோன்னு பெருசு பெருசாவில்லையா இருக்கும்.

என்று பேசிக்கொண்டே...

தொப்பிய கலட்டுனாக்க வெயிலு மண்டைய பொலக்குதையா என்று காரின் மீது இருந்த தொப்பியை எடுத்து மாட்டி கொண்டார். தொப்பியில் இருந்த சிங்கம் கம்பீரமாய் பளீர் என்று தெரிந்தது.

அடேய் மாட்டு பயலே. கண்ணுமுன்னு தெரியாம இப்படியா வண்டியே ஒட்டுவீறு. ஜனங்களுக்கு ஏதாவது ஒன்னு கணக்கா ஒன்னு ஆகிருந்தா என்னாவுல பண்ணுவீரு? ஜீப்ப கொண்டாயா ஏத்துயா வண்டியில.

வாகனம்: சார் நீங்கபாட்ல இந்த முத்து பேச்ச கேட்டு எதுவும் பண்ணிடாதிங்கே... கமிசனருக்கு ஒரு பொண்ணு இருக்கு தெரியும்லே.

நீதி: ஆமா.

வாகனம்: அந்த பொண்ணுக்கு வாங்கினது தான் இந்த காரு.

நீதி: அந்த பொண்ணு பாரின்லல்லயா இருக்கு.

வாகனம்: அட வந்து மூணு நாள் ஆவுது சார். இது கூட தெரியாம என்ன சார் பெரிய அதிகாரி நீங்க.

நீதி: யோவ் அப்போப்போ சார் வீட்டுக்கு கூட மாடே ஒத்தாசி வேல நீ தாம்லே பாத்துகிட்ருக்கே...

வாகனம்: அதுக்கு முன்னாடி நீங்க தானே பாத்திங்கே... என்றான் முனங்கிய படி.

நீதி: என்னயா?

வாகனம்: அட ஒண்ணுமில்ல சார். வீணா பேசி வம்புல மாட்டிகாதிங்கே.. அவ்வளோ தான் சொல்லுவே. நீங்க அந்த பையன அப்படியே அனுப்புங்க. இங்குட்டு க்ரொவ்ட நா பாத்துக்குறேன்.

நீதி: வெயிலு கொஞ்சம் தூக்கலா தான்யா இருக்கு. என்று சொல்லி கொண்டே தொப்பியை கார் மீது வைக்க சென்றார். அந்த பையனை பார்த்து விட்டு தொப்பியை கவுட்டை கைக்குள் வைத்து கொண்டு.  கெளம்புங்க தம்பி. நீங்க கெளம்புங்க. சார கேட்டதா சொல்லுங்க.

சத்யன்: சார் சாரி சார்.

நீதி: பரவால்ல இருக்கட்டும்.

சத்யன்: இது கமிசனர் வண்டில்ல அவரு பொண்ணு வண்டி அதான் என்ன பண்றது எப்டி சொல்றதுன்னு புரியாம நின்னுருந்தேன். நீங்களே புரிஞ்சி கிட்டிங்க. ரொம்ப தாங்க்ஸ் சார்.

வியாபாரி முத்தம்மாள்: அடேய் நில்லுடா நசுக்குன பொருளுக்கு பணத்த வச்சிட்டு கெளம்பு.

நீதி: கெழவி சும்மா இருக்கமாட்டே? நீங்க போங்க தம்பி.

டிரைவர் கார் எடுத்து கிளம்பினான்.

அங்கிருந்த வியாபாரிகள் அதிகாரிகளின் கையாலாகாத்தனத்தை பார்த்து நக்கலாய் சிரித்தனர்.

தங்கள் நிலைமையை புரிந்து கொண்ட நீதிதேவன்.

நீதி: ஏலே கெழவி நசுங்குன காயா போட்டுடாதே... நாளக்கி கொண்டாருவையே சுத்தமான காயி அத வீட்டுக்கு அனுப்பி வையி. என்னா சொன்னது விளங்கிடதாவுல?

வியாபாரி முத்தம்மா: நல்லா காயா போட்டுவிடுறேன் ராசா.

நீதி: ம்ம். கெளம்பு கெளம்பு...

கம்பீரமாய் தொப்பியை எடுத்து மாட்டி கொண்டார் நீதிதேவன்.

தொப்பியில் இருந்து சிங்கம் தவறி கிழே விழுந்திருந்தது.

-திவான்