இரா ஜியின் சம்பவங்கள் - சிறுகதை

சொல்லுங்க சார்.

ரா ஜீ.

ரா ஜீ???!!!

எஸ் பகவான் ஸ்ரீ ரா ஜீ.

ஆமா சார் தெரியும்.

அவங்கள தான் கொலை கேஸ் சம்மந்தமா நீங்க விசாரிக்க போறீங்க...

அவங்களயா?!

எஸ். ஏற்கனவே ரெண்டு முறை அவர் மேல கம்ப்ளைன்ட் வந்தது. ஆனா என்ன நடந்ததுன்னு உங்களுக்கே தெரியும்.

ஆமா ப்ரூப் பண்ண முடியலன்னு கேள்வி பட்டேன்.

எஸ் பட், ஹி இஸ் ஜென்டில்மேன்.

எப்படி சொல்றீங்க சார்.

இது என்னோட பெர்சனல் ஒபீனியன்.

இதை நான் இவர்கிட்ட கேக்கலையே என்று மனதில் நினைத்தபடி ஓகே சார் என்று அசட்டு சிரிப்பை உதிர்த்தான் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் குமார்.

ஓகே நீங்க ஆசிரமத்துக்கு இப்போ கிளம்பினா சரியா இருக்கும். நான் அப்பைன்மென்ட் வாங்கி வச்சிர்க்கேன்.

ஓகே சார் என்ற படி சல்யுட் செய்துவிட்டு கிளம்பினான்.


இருபது ஏக்கர் பரப்பளவுள்ள அந்த ஆசிரமம். சற்று பிரமிக்க வைத்தது. விசாலமான மண்டபங்கள்,ஏராளமான பக்தர்கள் கூட்டம். அன்று அமாவசையோ , பவுர்ணமியோ கூட இல்லை. அன்று வெள்ளி கிழமை கூட இல்லை. வார விடுமுறை நாள் கூட அல்ல. புதன் அன்று இவ்வளவு கூட்டமா???

நல்ல வேலை யுனிபர்ம்ல வரல செந்தில் என்று தன்  கான்ஸ்டபிளிடம் சொன்னார்.

ஆமா சார் என்றார் செந்தில்.

செந்தில் முப்பத்தைந்து வயதை தாண்டியவர். அவருக்கும் ராஜேஷ்க்கும் நல்ல புரிதல் இருந்தது. ராஜேஷ் எங்கு சென்றாலும் செந்திலை தான் அழைத்து செல்வார்.

இருவரும் உள்ளே நடந்தனர்.

அங்கிருந்த ஆசிரம பெண் வேலையாள் ஒருவரிடம் இவர் அனுப்பி வைத்து வந்திருக்கிறோம் என்ற தகவலை சொன்னவுடன். அவர்களை ஆசிரமத்தில் வலது புறத்தில் அமைந்திருக்கும் கட்டிடத்திற்குள் அழைத்து சென்றாள்.

ராஜேஷ் திமிர் பிடித்தவன், தெய்வ நம்பிக்கை உள்ளவனும் கூட. ஆனால் சாமியார், பூசாரி என்று யாரவது வந்தால் வார்த்தையால் விலாசி விடுவான்.

கட்டிடத்திற்குள் நடந்து கொண்டே இருந்தனர். இந்த இடம் ராஜேஷ்க்கு புதிதாய் இருந்தது.
அவன் மனது சலனமில்லாமல் அமைதியாய் இருந்தது. ஐந்து கொலை வழக்கு, ஏழு கொள்ளை வழக்கு விசாரணை, இங்கு செல்ல வேண்டும், இவனை விசாரிக்க வேண்டுமென்கிற தொனதொனத்தல்கள் மனதில் அறவே இல்லை. காலி கோப்பையை கவிழ்த்தி வைத்தது போல இருந்தது.

ராஜேஷ் ஆசிரமத்தை நோட்டமிட்டு கொண்டே நடந்தான்.

வெளிநாட்டு பெண்கள் அழகழகாய் அங்குமிங்கும் நடந்து கொண்டிருந்தனர்.

நடந்து செல்லும் வழியில் வரும் அறைகளில் கூட்டம் கூட்டமாக தியானம் மேற்கொண்டிருந்தனர்.

அவனது காதுகள் மெல்லிய இசை சத்தத்தால் வருடபட்டுகொண்டிருந்தது. அப்பொழுது தான் கவனித்தான் கட்டிடம் முழுவதும் அங்கங்கே குட்டி ஸ்பீக்கர்கள் மாட்டபட்டிருப்பது. அந்த ஸ்பீக்கரை பார்க்கும் பொழுது தான் அங்கங்கே இருந்த CV கேமராவையும் கவனித்தான் ராஜேஷ்.

அந்த அறை வந்தது. அறை கதவை திறந்ததும் ராஜேஷ்க்கு ஜில்லென்று இருந்தது.

ராஜேஷ் அங்குமிங்கும் பார்த்தான் ஏசி எங்கு உள்ளதென்று.

செந்தில் உனக்கு கூலா இல்ல?

ஆமா சார்.

அவர்கள் முன்பு நடந்து சென்றவள் ஓரிடத்தில் நின்றாள். பிறகு மெதுவாய் திரும்பினாள்.

உங்களோட உடல்ல ஒரு வித மாற்றம் தெரியுதா? என்று வினாவினாள்.

ராஜேஷ் இல்லை என்றான்.

பொதுவா இந்த அறைக்குள்ளே வந்தவுடன் உஷ்ணமா பீல் பண்ணுவீங்க. அந்த மாதிரி எதுவும் மாற்றம் தெரியுதா?

ராஜேஷ் இல்லை என்றான் மறுபடியும்.

சரி நல்லது. அந்த சோபால உட்காருங்க. நீங்க ஒரு மணி நேரம் வெயிட் பண்ண வேண்டி இருக்கும். குருஜி தியனத்தில இருக்குறார் என்றாள் அவள்.

ஆனா நாங்க உடனே கிளம்பனும் என்றான் ராஜேஷ்.

அப்பொழுது உள்ளே இன்னொரு அழகான பெண் ஒருத்தி வந்தாள்.

சற்று பவ்வியமாக தலை குனிந்த படி அவள் முன்பு வந்து நின்றாள்.

அம்மா நீங்க ஏன் இந்த வேலை செய்து கொண்டு நீங்க போங்க நான் பார்த்துக்குறேன் என்று மரியாதையுடன் கூறினாள்.

சரி எனக்கு வேறு வேலையும் இருக்கு நீ இவங்களை பார்துக்கோமா என்று சொல்லிவிட்டு ராஜேஷை நோக்கி நடந்து வந்து அவனது உள்ளங்கையை தொட்டு பார்த்தாள்.

இதோ ஜில்லுன்னு இருக்கே என்றாள்.

ஆமா, ஆனா நீங்க உஷ்ணமா இருக்கும்ன்னு சொன்னீங்களே.

ஆனா நீங்க எதுவுமே மாற்றம் தெரியலன்னு சொன்னீங்களே... அது தெரிந்து தான் நானும் விளையாடினேன்.இது பகவான் இடம். இங்க வந்துட்ட நீங்க மாற்றம் உணர்ந்து தான் ஆகணும் என்று சொல்லி விட்டு கிளம்பினாள் .

இவங்க யாரு என்றான் ராஜேஷ் அந்த பெண்ணிடம்.

இவங்க எங்க அம்மா.

அம்மான்னா?

தாய்.

உன் பேரு என்னமா என்றார் செந்தில்.

தேவகி.

இப்போ போன உங்க அம்மா பேரு?

அம்மாவை பேர் சொல்லி அழைக்க கூடாதென்பது பகவானின் உத்தரவு.

சரி உங்க பகவான் எப்போ வருவார்?

வந்துவிடும் நேரம் தான். இன்னும் சிறுது நேரத்தில் வந்திடுவார் என்று சொல்லி விட்டு அவளும் கிளம்பினாள்.

அந்த அறை அமைதியாக இருந்தது.

ஆடை வெள்ளை நிறத்திற்கு உதாரணமாய் இருந்தது. பொலிவான முகம், நீளமான தாடி, வழுக்கை தலை. தூய்மையான ஒளியாக அவர்கள் முன்னே நின்றுருந்தார் பகவான் ஸ்ரீ ரா ஜீ.

வந்த உடனே ராஜேஷ் எழுந்து நின்றான்.

சொல்லுங்க என்றார் ரா.

உங்களோட தோற்றம் பார்த்த பின்ன நீங்க ஒருத்தரை கொலை செஞ்சிட்டதா உங்க மேல புகார் கொடுத்திருக்கார்ன்னு சொல்லவே தயக்கமா இருக்கு. அது இல்லாம உங்கள விசாரணைக்கு கூட்டி செல்ல வேண்டும் இப்போதே. நீங்க எங்க கூட ஒத்துழைக்கனும் என்றார் ராஜேஷ் .

வந்த வேகத்துல விசாரணை வாங்கன்னு கூப்பிட்ட எப்படி என்று சிரித்தார் ரா. மேற்கொண்டு யார் புகார் கொடுத்தாங்க, எதன் நம்பிக்கை அடிப்படையிலே விசாரணைக்கு நீங்கள் என்னை அழைத்து செல்லனும். சாதாரண விசாரணை என்றால் இங்கயே பேசிகொள்ளலாமே என்று முடித்தார் ரா.

உங்க மேல கொலை பண்ணினதா கம்ப்ளைன்ட் கொடுத்தது ஜானகி ராம். அவரோட மகனை நீங்க கொன்னுட்டதா சொல்லிர்க்கார். அப்புறம் பொதுவா சாட்சியை விசாரணை பண்ண தான் வீட்டுக்கு போவோம். அதுவும் எங்களுக்கு வேலை அதிகமா இருந்தா கண்டிப்பா ஸ்டேசனுக்கு வர சொல்லிடுவோம். நீங்க சாட்சி இல்ல உங்க மேல தான் கம்ப்லைண்டே இருக்கு ஸோ, நீங்க வந்து தான் ஆகணும்.

சரி கிளம்பலாம் என்றார் ரா.

செந்திலுக்கு ஆச்சிரியம் அவனுக்கு போன் போடுறேன், இவனுக்கு போன் போடுறேன்னு சொல்லுவார் என்று சந்தேகமில்லாமல் உறுதி செய்திருந்தார். ஒரே வார்த்தையில் அந்த நம்பிக்கை சிதறி போனது.

ராஜேஷ் முன்னே செல்ல பின்னால் செந்திலுடன் ராவும் வந்தார்.

ஆசிரமமே கூச்சலிட்டது. அந்த அறையை விட்டு வெளியே செல்ல விடாமல் அங்கிருந்தவர்கள் தடுத்தனர்.

செந்தில் அங்கேயே நில்லுங்க என்று சொல்லிவிட்டு அந்த அறையை விட்டு வெளியே வந்து பார்த்தார்.
நிறைய பக்தர்கள் கூட்டம். இவர்களுக்கு யாருக்கும் தெரியவில்லை அவரது குரு கைது செய்யபடுகிறார் என்பது. தெரிந்தால் இவர்களும் வந்து தடுப்பார். இவர்கள் அனைவரையும் மீறி அழைத்து சென்றால்...
ஒரு வேலை அவர் தந்த கம்ப்ளைன்ட் பொய் என்று நிருபீக்கபட்டால்???!!!
இங்கே இருப்பவர்களில் பல குழப்பங்களை ஏற்படுத்தி விடும். இப்பொழுது கைது செய்வதால் பல விபரீதமான விளைவுகளை விளைவிக்குமென்றெண்ணி உணர்ந்து
 திரும்பி வந்து சாரி சார் இங்கயே விசாரணை வச்சிக்கலாம் என்றான் ராஜேஷ்.

மெல்லிய சிரிப்புடன் வாங்க உள்ளே வாங்க என்று மீண்டும் சிரித்தான் ரா.

அனைவரும் உள்ளே சென்று அமர்ந்தனர்.

மற்ற அனைவரையும் வெளியே செல்லும் படி கேட்டு கொண்டார் ராஜேஷ்.

விசாரணை ஆரம்பித்தார் ராஜேஷ்.

ரா அதற்கு முன் தடுத்து இவ்வாறு பேசினார் நீங்க எதுக்காக அர்ரெஸ்ட் பன்னலையோ தெரியல. ஆனா உங்களோட நல்ல மனசுக்கு நன்றி சொல்லி தான் ஆகணும். இந்த இடம், இவ்வளோ ஜனங்க, அவங்க இங்க வசிர்க்க நம்பிக்கை, என் மேல் உள்ள நம்பிக்கை எல்லாமே சிதைக்கமா பார்த்துகிட்டதற்க்கு உங்களுக்கு என் மூலமா, என் ஆசிரமம் மூலமா நன்றி சொல்லியே ஆகணும் என்று ராஜேஷ் முன் வெறும் கையை நீட்டி எடுத்துகோங்க
என்று சொல்ல ராஜேஷ் என்னவென்று தெரியாமல் கையை நீட்டினான்.

அவன் கையில் வாட்ச் ஒன்று வந்து விழுந்தது.

எப்படி இது சாத்தியம் என்று அதிசியமாக அவரை பார்த்தார்.

உடலில் உடுத்தியிருப்பதோ ஒரே ஒரு துணி மட்டும், வேஸ்ட்டியில் சிறு மோதிரத்தை வைத்து கொள்ளுமளவுக்கு கூட தோதாக இல்லை. பிறகெப்படி என்று குழம்பி போனான்.

பிறகு ரா தொடர்ந்தார். இன்னைக்கு நிறைய ஏராளமான நிகழ்ச்சிகள் இருக்கு. உங்களை நாளைக்கு சந்திக்க முடியுமா? என்று கேட்டார்.

நாளைக்கு எந்த டைம்?

இதே நேரத்திற்கு வந்திடுங்க என்றார்.

சரி என்று சொல்லி விட்டு ராஜேஷ் கிளம்பினார்.

கிளம்பும் முன் ரா இவ்வாறு வினாவினார். ஏற்கனவே எங்கள் ஆசிரமத்திற்கு என்று ஒரு வக்கீல் இருந்தார். அவர் சமீபத்தில் தான் இறைவனடி சேர்ந்தார். அதன் பிறகு என் மீது புகார் எதுவும் வரவுமில்லை. நானும் வக்கீல் தேடி செல்லவுமில்லை. உங்களுக்கு தெரிந்த வக்கீலை யாரையாவது சிபாரிசு செய்ய முடியுமா?

சரி நாளைக்கு வரும் போது நம்பர் தரேன்.

சரி நல்லது என்று சொல்லி வெறும் கையை நெற்றி அருகே கொண்டுவந்து திருநீறு பூசி விட்டார்.

பிறகு ராஜேஷின் சட்டை பையில் திருநீறு பாக்கெட் ஒன்றும் வந்திருந்தது. அதை அவனிடம் யாரும் கொடுக்கவுமில்லை, இவன் வாங்கவுமில்லை.

எப்படி இதெல்லாம் சாத்தியம் என்ற குழப்பத்திலே ஆசிரமத்தை விட்டு கிளம்பி வந்தான்.

ஜீப்பில் சென்று கொண்டிருந்தனர்...

செந்தில் உங்களோட பாக்கெட்ல எதாவது இருக்குதான்னு பாருங்க.

அப்படில்லாம் எதுவும் இல்ல சார்.

பின்ன எப்படி என் பாக்கெட்டுல???!!!

சரி விடுங்க சார்.

உங்களுக்கு இதன் மேலெல்லாம் நம்பிக்கை இருக்கா? என்றான் ராஜேஷ்.

நிறையவே இருக்கு சார் என்றான் செந்தில்.

ஒரு பக்கம் நம்புற மாதிரியும் இன்னொரு பக்கம் சந்தேகமாவும் இருக்கு.

இப்படிபட்ட சக்தி வாய்ந்தவங்க எதுக்காக அவங்க சிஷ்யனையே கொலை எல்லாம் பண்ணனும்? இல்லன்ன அந்த பையன பெத்தவங்க பொய் சொல்லவேண்டிய அவசியமென்ன? இல்ல இவரை நம்பி வர்ற ஜனங்க எல்லோரும் ஏமாந்து தான் வர்றாங்களா? ஒரே குழப்பமா இருக்கு செந்தில்.

அப்போது ராஜேஷ் செல்லுக்கு ஒரு கால்.

பேசியது பெண் குரல்.

நிறைய பேசி இருந்தாள். பிறகு ராஜேஷ் சரி நீங்க இங்க வந்துடலாமே???!!! என்று கேட்டான்.

இல்ல சார் நீங்க இங்க வாங்க அந்த சாமியார் பத்தி எனக்கு ரொம்ப நல்லாவே தெரியும் அவன் ஒரு பொம்பள பொறுக்கி.

சரி எங்க என்றான் ராஜேஷ்.

இடம் சொன்னாள்.

ராஜேஷும் செந்திலும் அங்கே சென்றனர்.

முகம் மறைத்த படி ஒரு பெண் நின்றுருந்தாள்.

அவர்கள் பக்கம் திரும்பினாள். அருகில் அவளாகவே வந்து சார் இங்க வேணாம் அதோ அந்த பக்கம் போய்டலாம். ஆனா நீங்க மட்டும் வாங்க. ப்ளீஸ் என்றாள்.

சரி ஓகே செந்தில் இங்கயே இருங்க என்று சொல்லி விட்டு அந்த பெண் பின்னால் சென்றான் ராஜேஷ்.

முகம் மறைத்திருந்த துணியை விலக்கினாள். பேரழகு.

எதுக்காக வர சொன்னீங்க என்றான் ராஜேஷ்.

நீங்க ராவோட கேஸ எடுத்து நடத்துறதா எனக்கு தெரிஞ்ச சில அதிகாரிங்க கிட்ட இருந்து தகவல் வந்துச்சு. இதுக்கு முன்னாடி ரெண்டு தடவை ரா மிஸ் ஆகிட்டான். ஆனா இந்த தடவ மிஸ் ஆகிட கூடாதுன்னு தான் நானே சாட்சியமாக வந்து நிக்குறேன் என்றாள்.

சரி. முதல்ல உங்க பேரு சொல்லுங்க.

என் பேர் முக்கியமில்ல சார். நீங்க இந்த கேஸ்ல ராவ மாட்ட வைக்கணும்.

எதுக்கு மாட்ட வைக்கணும். உண்மையான ஆதாரம் இருந்தா அவனை தண்டிசுடலாம்.

அதுக்கு தான் ஆதரமா நானே வந்திருக்கேன். ஆனா என் முகம் வெளியே தெரிய கூடாது. எங்கே வந்தாலும் முகம் மூடி கிட்டு தான் வருவேன். அதுமட்டுமில்லாம. நீங்க அவனை கைது பண்ணிய பிறகு கோர்டில் அவனுக்கெதிரா சாட்சி சொல்ல மட்டும் தான் வருவேன் என்றாள்.

நீங்க உங்க இஷ்டத்துக்கு பேசிகிட்டே இருந்த காரியம் ஒன்னும் ஆகாது. எந்த விதத்துல அவனால பாதிக்கபட்டீங்கன்னு சொல்லுங்க என்றான் ராஜேஷ்.

ஒரு பெண் அதுவும் சாமியார் கிட்ட எப்படி பாதிக்கபட்டிருக்க முடியும் இந்த காலத்துல என்று கண்ணீர் வடித்தாள்.

ராஜேஷ்க்கு சங்கடமாக இருந்தது. எதுவும் பேசாமல் நின்றுருந்தான்.

அவள் அழுகையை கட்டு படுத்தி கொண்டு.

அந்த பூஜை பவுர்ணமி அன்று நடைபெறும். பல அழகான பெண்கள் நிர்வாண கோலமாக நின்னுட்டு இருப்பாங்க. ரா எந்த பெண்ணை விரும்புறானோ அந்த பெண்ணை ஒரு மேஜை மேல படுக்க வைப்பான். பிறகு அங்கிருக்கு வண்ண பூக்களில் மூன்றை எடுத்து ஒன்று நெற்றியில், ஒன்று தொப்புளில், ஒன்று ...

சரி சரி விடுங்க. வேணாம்... நீங்க சுருக்கமா சொன்னதே புரிஞ்சிடுச்சு. சரி நீங்க எப்போ வரணும்ன்னு சொல்றேன் அப்போ வாங்க. நீங்க பயபடமா இருங்க. கண்டிப்பா அவனுக்கு தண்டனை கிடைக்கும் என்று பேசி அனுப்பினான் ராஜேஷ்.

இரவு நேரம் செந்திலுடன் தன் வீட்டு மொட்டை மாடியில் பேசி கொண்டிருந்தான். சில ஆவணங்களும் கைகளில் இருந்தன.

வெயிட் செந்தில்.

கரக்ட்டா பாருங்க இது அவர் தானா?

ஆமா சார்.

இந்த ராவோட அப்பா எப்படி இவ்வளவு பெரிய ரிஷி கூட பழக்கம் இருக்க முடியும். அடுத்தடுத்த போட்டோக்களும் ஆச்சிரியத்தை தந்தன.

சரிங்க சார் இந்த போட்டோ பாருங்க.

இது யார் கூட.

இது யார் கூடயும் இல்ல. ரா ஸ்கூல் போட்டோ அப்போ கூட அவனோட தோற்றம் ஒரு ஆன்மீகவாதி போல தான் இருக்கு.

இவன் எந்த ஸ்கூல்ல படிசார்ன்னு டீடைல் எதாவது இருக்கா?

இல்ல சார்.

சரி அத எடுங்க.

இது அவன் காலேஜ் போட்டோ சார்.

காலேஜ் டீடைல் எதுவும் இருக்கா?

இருக்கு சார் ஆனா இன்னும் நம்ம கைக்கு கிடைக்கல.

பைலை குளோஸ் பண்ணிட்டு சிறுது நேரம் யோசித்தான். பிறகு பேச தொடங்கினான்.

அந்த பெண்ணும் அந்த சாமியார் வசமாக மாட்டிய பின்பு தான் நான் சாட்சி சொல்ல வருவேன் என்றும் சொல்லி விட்டாள். ஆனால் அந்த சாட்சியை கூட சுலபமாக கலைத்து விட முடியும்.

பிறரை கட்டுபடுத்த கூடிய சக்தி. தன்னை நம்பி வரும் பக்தர்கள். வெளிநாட்டில் இருந்து வரும் கூட்டம். இத்தனை பேரும் என்ன கிறுக்கர்களா? என்று செந்திலிடம் கூறினார் ராஜேஷ்.

அப்போ ரா நல்லவனா சார்?

ஏன் இருக்க கூடாது செந்தில்?

அப்படின்னா அவன் மேலே வர்ற புகார்?

யார் மேலே புகார் இல்ல?

சார்.... என்று இழுத்தான் செந்தில்.

நாளைக்கு பவுர்ணமி. நாம ஆசிரமத்தில உள்ளே போய் ஒரு வீடியோ எடுத்துட்ட நமக்கு ஆதாரம் கிடைசிடுமில்ல? அப்படி எதுவும் கிடைக்கலன்னா அப்படி எதுவும் அங்க நடக்குறதில்லன்னு முடிவு பண்ணி நம்ம வேலைய நாம பாக்கலாம் என்றான் ராஜேஷ்.

சார் இது நல்ல ஐடியா.

சரி இப்போ மணி என்ன என்றார் ராஜேஷ். வீட்டின் மொட்டை மாடி என்பதால் சாதரணமாக கைலி கட்டி கொண்டே வந்திருந்தனர். அதற்குள் அந்த பெண்ணிற்கு போன் பண்ண போனில் எண்ணை டயல் செய்யும் பொழுது தான் கவனித்தான் நேரத்தை. பிறகு வாட்சை பார்த்தான். போனை கட் செய்து விட்டு வாட்சை கையில் எடுத்தான்... பிறகு பின்வருமாறு செந்திலிடம் வியப்புடன் கூறினான்.

செந்தில், மேட் இன் சொர்க்கம்ன்னு ஏன் வாட்ச்ல போடல? என்றான்.

என்ன சார் சொல்றீங்க.

இது டைட்டான் வாட்ச்.

ராஜேஷ் செந்திலை பார்த்து மெலிதாக புன்னகைத்தான். இந்த கேஸ் கூடிய சீக்கிரத்துல முடிவுக்கு வந்திடும் என்றது அந்த புன்னகை.

அடுத்த நாள் காலை அந்த வாட்சை எடுத்து கொண்டு டைட்டான் வாட்ச் கடைக்கு சென்றான். அந்த வாட்சில் உள்ள கோட் நம்பரை வைத்து அவர்களின் கம்ப்யூட்டரில் செக் செய்து பார்க்க சொன்னான்.

அந்த ஊழியர் செக் செய்தான். மதுரையை அடுத்த ஏதோ குக்கிராமத்தின் பெயரை காட்டியது. அங்கே பத்துக்கும் மேற்பட்ட வாட்ச்கள் சென்றிருப்பது தெரியவந்தது.

அந்த கிராமம் எங்கே உள்ளது அதை பற்றிய தகவல் என்ன என்பதை அந்த கிராமம் அமைந்துள்ள நகரத்தில் உள்ள போலீஸ் ஸ்டேசனில் கேட்டு தெரிந்து கொண்டார். அப்படி விசாரிக்கையில் தான் தெரிந்தது அந்த கிராமத்தில் உள்ள அந்த விலாசம் ரா ஜியின் கிராம சேவா மைய பிரிவை சேர்ந்தது என்று.

அன்று இரவு பதினென்று இருக்கும்.

காதில் ஹெட் போன் மாட்டி கொண்டான். அந்த முகம் மறைத்து வந்த பெண்ணுடன் பேசி கொண்டே வந்தான்.

நான் இப்போ ஆசிரமத்துல நுழைஞ்சிட்டேன்.

எந்த பக்கம்? நீங்க நிக்குற இடத்திற்கு எதாவது அடையாளம் சொல்லுங்க.

ஒரு சிலையை சுட்டி காட்டினான்.

ரொம்ப வசதியா போச்சு... உங்க ரைட் சைட்ல பில்டிங் இருக்கும். அதுல பர்ஸ்ட் புளோர்ல எல்லோ கலர் ரூம் இருக்கும். அது மட்டும் தனியா தெரியும் பாருங்க. அந்த ரூம்ல தான் நான் சொன்ன பூஜா நடக்கும்.

சரி நான் வேலைய முடிச்சிட்டு கால் பண்றேன்.

ஒரு பைப் வழியாக ஏறினான். அங்கிருந்த ஜன்னல் வழியே தன் கேமராவை செலுத்தினான். உள்ளே நடந்து கொண்டிருக்கும் அத்தனை விசயங்களும் பதிவாகின.

நிர்வாணமான பெண்கள். யாரும் சுயநினைவுடன் நிற்பதாக தெரியவில்லை.

திடிரென அந்த அறையில் ஆளுகொரு பக்கமாய் பரபரப்பாக செல்ல தொடங்கினர்.

ராஜேஷும் கமெராவை மடக்கி உள்ளே வைத்து கொண்டு வந்த வழியே திரும்பி செல்ல தொடங்கினான்.

ஓரிடத்தில் வலது புறம் திரும்பவேண்டியத்தில் இடது புறம் திரும்பி வந்த வழியை மொத்தத்தையும் மறந்து போனான். ஏதோ கட்டிடம் கட்டும் பகுதிக்குள் நுழைந்திருந்தான்.

அங்கங்கே விளக்குகள் எரிய தொடங்கின. தூங்கி இருந்தவர்கள் பரபரப்புடன் அறையை விட்டு வெளியே வந்தனர்.

ராஜேஷ் எப்படியாவது ஓடி விட வேண்டுமென்று திரும்பினான்.

இந்த நேரத்துல இங்க என்ன பண்றீங்க ராஜேஷ் என்று ரா அவன் முன்பு நின்றுருந்தான்.

ராஜேஷ்க்கு பதில் சொல்ல முடியவில்லை.

கையில் வைத்திருந்த முறுக்கு கம்பியை கொண்டு ராஜேஷின் வயிற்றில் இறக்கினான்.

சில நிமிடத்தில் ராஜேஷ் பிணமாகி இருந்தான்.

பிறகு அவனை இழுத்து வந்து ஆசிரமத்தின் பின் புறத்தில் உள்ள தோட்டத்தில் குழி தோண்டி புதைக்க தொடங்கினான்.

எப்பொழுதும் இப்படி புதைக்க தொடங்கையில் தான் அவனது முற்கால நினைவுகள் வந்து போகும்.

ராவின் இயற்பெயர் காளிமுத்து.

கூவ ஆறு சாக்கடையாகி போன கரையோரத்தில் கொசுக்கடியில் குடிசையில் படுத்துறங்கும் அன்னாடகாட்சியின் முருகனுக்கு பிறந்த மகன் தான் காளிமுத்து. இரண்டு தினங்களுக்கு ஒரு முறை தான் சோறு. அதுவும் யாரோ காளிமுத்துவின் அம்மாவிடம் கொடுத்தனுப்பும் பழைய சோறு.

அதே பகுதியில் கூவ ஆற்றுக்கு சற்று தள்ளி ஆபிரகாம் என்ற நாற்பது வயதுடையவர் ஒருவர் இருந்தார். அவர் ஒரு மேஜிக்மேன். நாடக மேடையில் நாடகம் ஆரம்பிப்பதற்கு முன் பதினைந்து நிமிடம் இவரது மேஜிக் ஷோ நடைபெறும்.

ஆபிரஹாம் அந்த குடிசை பகுதியில் வந்து தன் மதத்தில் சேருபவர்களுக்கு தன்னுடைய மேஜிக் தொழிலை கற்று தருவேன் என்று ஆட்களை திரட்டி கொண்டிருப்பார். அதே போல மேஜிக் தொழிலையும் கற்று தருவார்.

அந்த கூட்டத்தில் காளிமுத்துவும் ஒட்டி கொண்டான். அவனது குடும்பம் அவனை எக்கேடா கேட்டு போறான் என்று விட்டுவிட்டனர்.

காளிமுத்து ராபர்ட் என்று மாறியிருந்தான்.

சில ஆண்டுகள் ஓடியது.

சர்கஸ் கம்பெனிகள் பொலிவிழந்து கொண்டிருந்த நேரமது. அங்கிருந்தவர்கள் அடுத்த தலைமுறைக்கு தங்களது தொழிலை சொல்லி தரவில்லை.

படிப்படியாக தான் நிகழ்சிகளை குறைக்க முடியும். அதே போல மக்கள் எத விரும்பி பக்குரான்களோ அந்த நிகழ்ச்சியை மட்டும் சேர்த்துட்டு மிச்சத்த குறைத்து கொள்ளலாம். அப்போ தான் ஜனங்க வருவாங்க என்று கம்பெனி முதலாளிகள் முடிவெடுத்தனர்.  அதன் படி மேஜிக் போலி என்று தெரிந்துவிட்டது மக்களுக்கு. ஒரு முறை இல்ல இரு முறை பாக்குறாங்க. அதுகப்புறம் அவங்க இதெல்லாம் விரும்புறதில்ல.

பிறகு ராபர்ட்டுக்கு அங்கு வேலை பறி போனது. தெருவில் வயித்து பசியில் ரோட்டோரம் நடந்து சென்று கொண்டிருந்த பொழுது. ஓரிடத்தில் பெரும் கூட்டம்.

அங்கே சென்று பார்த்தான்.

ஒருவன் மேடை மீது நின்றுகொண்டு வாயிலிருந்து லிங்கம் எடுத்தான். விபூதியை வெறும் கையால் பூசி கொண்டிருந்தான்.

இவன் உடனே மேடையேறி அவன் அருகில் சென்றான். அவனது சட்டையின் கையின் இடுக்கில். காலரில் ஒளித்து வைத்திருந்த விபூதி கட்டிகளை அனைவருக்கும் எடுத்து காட்டினான். இவன் போலி இந்த மாதிரி ஆட்களை நம்பாதீங்க என்று கத்தி கொண்டிருந்தான்.

மெதுவாய் அந்த சாமியார் ராபர்டின் சட்டை பையில் இருந்து சில விபூதி கட்டிகளை எடுத்தான். இதோ பாருங்க. இது இவன் கொண்டு வந்தது. இது என்னிடம் இருப்பது போல உங்களிடம் காட்டி விட்டான்.

ராபர்ட்டுக்கு ஒரே ஆச்சிரியம். பலே மேஜிக்மேன் தன்னையே ஏமாற்றிவிட்டான் இவன் என்று தன் மேல் கோப பட்டு கொண்டான்.

மெரினாவில் நடக்கும் பொழுதெல்லாம் ஜோடிகள் செய்யும் சில்மிஷத்தை காணும் பொழுது தன் வயதை நினைத்து பார்த்து வேதனை கொள்வான்.

ராஜேஷை முழுதும் புதைத்து விட்டான்.

தான் செய்வது தவறேன்னும் மனசாட்சி சொல்லும் பொழுதெல்லாம் மனதை தேற்றி கொள்ள.

என்னுடைய அந்நியாயைத்தை நியாய படுத்துவதில்லை. இந்த முட்டாள் மக்கள் திருந்தும் பொழுது தானும் திருந்துவிடுவேன் என்று தனக்கு தானே சொல்லி கொள்வான்.

மறு நாள் காலை அந்த பெண் ஆசிரமம் வழியாக காரில் மெதுவாய் சென்ற படி வேவு பார்த்தாள். எப்பொழுதும் போதே மக்கள் கூட்டம் கூட்டமாய் ஆசிரமத்திற்கு  சென்று கொண்டிருந்தனர்.

இரா ஜியின் சம்பவங்கள் தொடரும்...

- திவான்


No comments:

Post a Comment